Headlines News :

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Written By We Are Anonymous on Tuesday, May 17, 2016 | 10:01:00 AM



நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக யாழ். மாவட்ட மீனவர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் கடல் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளன.

சீரற்ற வானிலையால் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்லவியலாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கரவெட்டி மற்றும் இன்பருட்டி பகுதிகளில் நேற்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கனகாம்பிகை குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இரணைமடு குளத்திற்கு செல்லும் பிரதான வீதியின் பாலம் உடைந்துள்ள நிலையில், பிரதேச மக்கள் மாற்று வீதியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் ஏ-32 வீதி நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் பாதி்க்கப்பட்டுள்ளது.

தொடரும் மழையினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுள்ளது.

இதேவேளை, வவுனியா – மடு, பண்டிவிரிச்சான் பிரதான வீதி தொடர்ந்தும் நீரிழ் மூழ்கிக் காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தின் போது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, சம்பூர், சாம்பல் தீவு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

தொடரும் மழையினால் கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதி மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கல்லாறு, மண்டூர், பட்டிருப்பு, கல்லடி போன்ற வாவிகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

போரைத்தீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.

இதேவேளை, அக்கரைப்பத்தன பகுதியில் லிந்துலை – டயகம பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உண்மையில் பிரதமரின் வாகனத்துக்காக எவ்வளவு செலவிடப்படவுள்ளது?

Written By We Are Anonymous on Monday, May 16, 2016 | 8:40:00 PM




பிரதமருக்கான வாகனக் கொள்வனவு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவால் வௌியிடப்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்சைகள் பற்றி மக்களுக்கு உண்மை நிலையை தௌிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்கவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் அலுவலகத்தால் அவரது பயன்பாட்டுக்காக எந்தவொரு உத்தியோகபூர்வ வாகனமோ பாதுகாப்பு வாகனமோ வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட இரு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஜூப் வண்டி ஒன்றையுமே, அவர் பயன்படுத்தி வந்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையும் பழையவை, குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விபரம் இல்லாமையால் அவற்றை பதிவு செய்யவோ பயன்படுத்தவோ முடியவில்லை, மேலும் அந்த வாகனங்களில் நிலையும் நன்றாக இல்லை, தினம் தினம் புனரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, 2015ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி முதல் புனரமைப்பு மற்றும் பராமரிப்புக்காக 9.8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ரணில் விக்ரமசிங்க பல சந்தர்ப்பங்களில் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தியுள்ளார், இதற்காக எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை எனவும் சாகல ரத்நாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரதமர் அலுவலகத்தால் உத்தியோகபூர்வ வாகனம் வழங்காமையால், புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில் தவறில்லை எனவும் கூறியுள்ள அவர், பிரதமருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு முன்வைத்துள்ள அறிக்கையின் பிரகாரம் முதல்கட்டமாக அவருக்கு பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பாதுகாப்பு வாகனங்கள் இரண்டைக் கொள்வனவு செய்ய 128 மில்லியன் செலவாகும். ஏனைய 468 மில்லியன் ரூபாய் அரசாங்க வரிப் பணம். அவை அரசாங்கத்தின் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றப்படுபவை, உண்மையாக செலவிடப்படும் பணம் அல்ல எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம்..! ராணுவம் களத்தில்


சீரற்ற காலநிலை காரணமாக பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை சுற்றியுள்ள குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் பாராளுமன்ற கட்டத்தொகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றியுள்ள குளத்தின் நீர்மட்டம் கட்டல் மட்டத்தில் இருந்து 1.3 மீட்டர் எனவும் அது 1.8 மீட்டர் வரை உயரும் பட்சத்தில் நீர் பாராளுமன்ற கட்டத்திற்குள் புகும் என தெரிவிக்கப்படுகிறது.

ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

Written By We Are Anonymous on Wednesday, March 23, 2016 | 12:23:00 AM


ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற HTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.


HTTPS என்றால் என்ன?

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.- Wikipediaசுருக்கமாக சொன்னால் ஒரு இணையதளத்திற்கும், அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும் முறை ஆகும்.

விரிவாக காண இணைய பாதுகாப்பு தொடரை படிக்கவும்.

தற்போது இந்த வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக வழங்குகிறது.


ப்ளாக்கரில் Settings => Basic பகுதிக்கு சென்று, அங்கு "HTTPS availability" என்ற பகுதியில் Yes என்பதை தேர்வு செய்து சேமிக்கவும். அவ்வளவு தான்!

இதனை செய்த பிறகு உங்கள் ப்ளாக் முகவரிக்கு முன் https:// என்று வரும்.உதாரணத்திற்கு,

http://nanbanpakkam.blogspot.com/ என்ற முகவரி இந்த வசதியை வைத்த பிறகுhttps://nanbanpakkam.blogspot.com/ என்று வரும்.

கவனிக்க:

இந்த வசதியை வைத்த உடனேயே பழைய முகவரிக்கு செல்லும் போது தானாக புதிய தளத்திற்கு செல்லாது. சிறிது காலம் ஆகும்.
இந்த வசதியை வைத்தால் சில டெம்ப்ளேட் வசதிகள் அல்லது விட்ஜட்கள் வேலை செய்யாது.
டாட் காம் போன்ற கஸ்டம் டொமைன்களுக்கு இந்த வசதி பொருந்தாது.உண்மையில் இந்த பாதுகாப்பு வசதிஅனைத்து தளங்களுக்கும் அவசியமானதாகும்.

மேலும் இந்த வசதியைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்!.

பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?


பேஸ்புக் நிறுவனம் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பதை மற்றவர்களைவிட பதிவர்களுக்கு நன்றாக தெரியும். ப்ளாக்கில் பதிவெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பேஸ்புக்கில் மட்டுமே இயங்கி வருகின்றனர். தற்போது பேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் தான் நிரம்பி வழிகின்றது. இந்த பதிவில் பேஸ்புக் வீடியோவை மிக எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

பேஸ்புக் வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Show URL" என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அந்த முகவரியை Address Bar-ல் Paste செய்யுங்கள்.
அதில் www என்பதை நீக்கிவிட்டு m என்று கொடுங்கள்.
புதிய முகவரி இப்படி இருக்கும். https://m.facebook.com/whatzupvidz/videos/826508124099459/
இப்போது வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Save Video as" என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.

ஜும்ஆ பிரசங்கம் செய்தபோது, மரணமடைந்த 16 வயது இளைஞன் (படங்கள்)

Written By We Are Anonymous on Thursday, March 3, 2016 | 2:04:00 AM


லெபனானைச் சேர்ந்த 16 வயது இளைஞன் சென்ற 21-02-2016 அன்று வெளிள்க்கிழமை குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலிருந்து சரிந்து விழுந்தார். 


அப்துல் ரஹ்மான் என்ற பெயர் கொண்ட இந்த இளைஞனுக்கு யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கிடைத்துள்ளது. தனது மகன் சரிந்து விழுவதை தகப்பனாரும் கண்டு கொண்டிருந்தார். இந்த இளைஞனின் பாவங்களை இறைவன் மன்னித்து சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - அவனிடமிருந்தே வந்தோம் நாம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள்.

நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு 1,000க்கு மேற்பட்ட பொருட்களுக்கு விலைக் கழிவு



இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும், இம்மாதம் 14 – 20 ஆம் திகதிவரை இந்த நுகர்வோர் வாரத்தை நாடெங்கிலும் சிறப்பாகக் கொண்டாட தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு, வோக்சுவல் வீதியில் அமைந்துள்ள, நுகர்வோர் அதிகார சபையில் இன்று (03/03/2016) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

எனது அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority), இந்த வாரத்தை அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதோடு, அதற்கான பூரண அனுசரணையையும் வழங்குகின்றது.

இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாது, தாமாகவே விரும்பி இந்த வாரத்தை சிறப்பிக்க தமது பூரண பங்களிப்பை நல்க முன்வந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் வாரத்தில், இந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

சுமார் 60 க்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பங்களிப்புடன், ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களை நுகர்வோருக்கு விஷேட சலுகைகளில் வாரம் முழுவதும் வழங்குவதற்கு முடியும். அத்துடன், இந்த வாரத்தில் நுகர்வோர் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும், விஷேட கழிவுகள் வழங்கப்படும் என்பதையும் நான் இத்தருணத்தில், பெருமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மேலும், இந்த வாரத்தை சிறப்பாக அமுல்படுத்தும்வகையில், வணிக சங்கங்கள், சுப்பர் மார்கட்கள், மருந்து விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், ஆபரணங்கள், மின்சார இலத்திரனியல் பொருட்கள், கட்டடப் பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இதில் தீவிரமாகப் பங்கேற்கவுள்ளன என்பதை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

இந்த வாரத்தின் இன்னுமொரு முக்கிய அம்சமாக, இம்மாதம் 15ஆம் திகதி, கண்டியில் நுகர்வோர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் நுகர்வோர் அமைப்புகளின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், குடும்பப் பெண்கள், அரச அதிகாரிகள், மற்றும் பொதுமக்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஓர் அங்கமாக, வீதி நாடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழியாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், நுகர்வோர் உரிமை தொடர்பாக, தேசிய ரீதியில் மாணவர்களுக்கிடையிலான கட்டுரை மற்றும் சுவரொட்டிப் போட்டிகளை நடத்துவதற்கும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் எனக் கூறிய அமைச்சர் றிசாத், நுகர்வோர் வாரத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்னின்று உழைப்பவர்களுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்படத்தக்கது.

யார் என்ன சொன்னாலும் இவ்வருடத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவோம்


யார் என்ன சொன்னாலும் இவ்வருடத்துக்குள் எல்லை நிர்ணயப் பணி முடிவடைந்ததும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாங்கள் நடத்தியே தீருவோம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இன்று(03) காலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மூன்று மாத காலத்துக்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான பணிகள் மூன்று மாவட்டங்களில் மாத்திரம் நிரைவடைந்துள்ளதாகவும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்ததும் நங்கள் உடனடியாக தேர்தலை நடத்துவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தலை ஒத்திப்போட வேண்டிய அவசியம் எவ்வகையிலும் எமக்கில்லை. அசோக்க பீரிஸ் தலைமையிலான எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை கண்டறியும் குழு தமது பணியை நிறைவு செய்யாமல் எம்மால் தேர்தலை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணயம் என்பது மிகவும் கடினமான பணியாகும். இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவருக்கும் சமமான முறையில் எல்லை நிர்ணயப் பணியை மேற்கொள்ளவுள்ளதால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் காலதாமத்தை வைத்துத்தான் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று இவ்வருடத்தில் எந்தவித தேர்தலும் நடைபெறாது என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் நடத்தாவிட்டால் வீதிக்கு இறங்கி போராடுவோம் என கூறி ஒன்றிணைந்த எதிர்கட்சி மக்களை பிழையாக வழிநடத்த எத்தனிக்கின்றது. இதனை எங்களால் ஏற்க முடியாது. யார் என்ன சென்னாலும் எல்லை நிர்ணயப் பணிகளை முடிவு செய்யாமல் புதிய முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.


இலங்கை ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள தீர்மானம்



இலங்கை நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவினை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது குறித்து, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனிவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சேயா சவ்தமியின் வழக்குக்கு 15ம் திகதி இறுதித் தீர்ப்பு



கொடதெனியா சிறுமி சேயா சவ்தமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Design Your Website

Design Your Website

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

Recent Post

Comments

twitter maskolis
 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Website | Mohamed Hasni | Mohamed Solution
Copyright © 2016. my New Desi - All Rights Reserved